சிவனை அடையும் வழி

57§

பிறரோடு இணங்கிப்போவது எப்படி?§

ந்துக் கலாச்சாரத்தில் குடும்பமும் சமுதாயமும் மிகவும் முக்கியம் என்பதோடு யாவற்றிற்கும் மேலாக மனித உறவுகள் வெகுவாக மதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் நாம் பிறருக்கு நன்மை செய்யவும், கற்றுக்கொள்ளவும், உதவி செய்யவும், மேலே உயர்த்தி விடவும் பல வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. பலபேர் பிறரோடு இணங்கிப்போக முடியாமல் சிரமப்படுகின்றனர். அவர்கள் எப்போதும் ஏதாவது வாதம் புரிந்து கொண்டும் கடுமையான உணர்வுகளை மனதில் தேக்கி வைத்துகொண்டும் இருக்கின்றனர், பிறருடன் இணக்கமான உறவை நிலைநாட்டிக்கொள்ள வேண்டுமெனில், முதலில் நாம் நமக்குள்ளே அமைதியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் வாழ்க்கை அளிக்கும் எல்லா வாய்ப்புக்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் சங்கடத்தில் அல்லது கவலையில் இருந்தால் நாம் சிறப்பாக செயல்பட இயலாது.§

சாந்தி என்று சமஸ்கிருதத்தில் வழங்கப்படும் மன அமைதியானது பொன்னைவிட மேலானது என்பதால் நமது இந்து கலாச்சாரம் அதைப் பாதுகாக்க பல வழிகளைக் காட்டியுள்ளது. வழிபாடு, தொண்டு மற்றும் யோகம் ஆகியன மூன்று வழிகளாகும். குருதேவர் இன்னொரு வழியையும் சேர்த்துள்ளார். அதாவது பிறருடைய உணர்வுகளைப் புண்படுத்தாமல் இருக்கும் பரிசீலனை என்ற வழியையும் காட்டியுள்ளார். நாம் நமது எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் கருணையோடும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கிறோம். பிறர் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அப்படியே நாம் பிறரையும் நடத்த வேண்டும். அவர்களின் நற்பண்புகளையும் நற்பணிகளையும் நாம் போற்றுகிறோம். நாம் விவாதத்தில் ஈடுபடுதலோ அல்லது கோபமான கடுஞ்சொற்களைக் கூறுவதோ இல்லை. அப்படிக் கூறுவதால் அங்கு இருப்போரின் சாந்தியைக் குலைப்பதோடு மனதையும் நோகடிக்கிறோம். திருக்குறள் கூறுவதாவது:§

“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” (குறள் 129). (தெளிவுரை) (தீயினால் சுட்ட புண் ஆறிவிடும். ஆனால் நாவினால் சொன்ன சுடுசொல் ஆறாது)§

ஒருவருடன் அபிப்பிராய பேதம் இருப்பின் அதை அவருடன் பேசித் தீர்த்து, மன்னிப்பு கேட்டோ, மன்னித்து விட்டோ இரவில்உறங்கப் போகுமுன் தீர்த்துக் கொள்ளவேண்டும். எல்லோரிடமும் நல்லிணக்கத்துடன் வாழும்போது நாம் வாழ்வில் மேலும் மச்ழ்சியாக வாழ்வதுடன் துடிப்புமிக்க மனிதர்களாக இருக்கிறோம். நம்முடைய மிக நெருங்கிய உறவினர்களுடன் நாம் இணங்கிப் போவது மிகவும் முக்கியம். இணக்கவுணர்வு வீட்டில் தொடங்கி வாழ்வின் எல்லா பகுதிக்கும் சுடர்விட்டு ஒவ்வொரு உறவிலும் ஒளியையும் அன்பையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருகிறது.§

image§

shutterstock§

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் படகுப் போட்டி நடக்கும். வாழ்க்கையின் மற்ற விஷயங்களில் உழைப்பைப் போடுவதுபோல, குழுக்களில் உள்ளவர்களும் தனிப்பட்ட ரீதியில் திடமாக இருக்கவும் குழுவாக ஒன்றாக செயல்பட்டு தம் நோக்கத்தை நிறைவேற்றவும் கடுமையாக பயிற்சி மேற்கொள்கின்றனர்§

குருதேவர்: இராஜதந்திரம் என்பதும் ஒரு வகை அன்பே. சக மனிதர்கள் யாரையும் நோகடிக்காமல் வெறுப்பு, கோபம் ஆகிய உணர்ச்சிகளை ஒடுக்கி ஒருவகை இணக்கத்தை அது ஏற்படுத்தித் தருகிறது. இவை அறிவாளித்தனத்தின் பலன்கள். மேதாவித்தனம் உறுதியாகி அறிவுக்கோசம் உண்டாகப்பெற்றதும் கீழ்நிலையிலுள்ள உணர்வுகளை கட்டுப்படுத்தப்பட்ட நினைவுகள்மூலம், கட்டுப்படுத்தப்பட்ட புத்தியின்மூலம், மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வைராக்கியத்தின்மூலம்—அதாவது இயற்கையை ஆளக்கூடிய இம்மூன்று கூறுகளையும் அடக்க இயலும்.§