சிவனை அடையும் வழி

55§

நன்னடத்தை என்றால் என்ன?§

ன்னடத்தை என்பது சரியான எண்ணம், சரியான சொல், சரியான செயல் என்பதாகும். சரியான என்றால் தர்மத்தோடும் தூய ஆன்ம இயல்போடும் ஒத்துப்போவது என்று பொருள்படும். எல்லா உயிர்களும் ஓர் அற்புதமான பயணம் மேற்கொண்டிருக்கும் தெய்வீக ஆன்மாக்கள் என்றும், அப்பயணத்தின்போது நாம் பல பாடங்களைப் படித்துக்கொள்கிறோம் என்ற உயர்ந்த அறிவை நமது சமயம் நமக்கு ஊட்டுகிறது. ஒவ்வொருவரும் வெளித்தோற்றத்தில் பூரணமாக இல்லாவிடினும் நாம் சந்திக்கும் அவர்களிடம் ஒளிவீசும் அழகிய ஆன்மாவைக் காண்கிறோம். அவர்களிடம் உள்ள நிறைகளைக்கண்டு குறைகளை புறக்கணிக்கிறோம். நம்மால் இயன்றவரை பிறருக்கு உதவி நல்க முனைகிறோம். அவர்களின் குறைகளைச் சொல்லாமல் மனதை நோகடிக்காமல் அவர்களை உயர்நிலைக்கு உயர்த்த எப்போதும் விழைகிறோம். முதலில் நாமே ஒரு நல்ல உதாரணமாக இருந்து யாரும் நம்மை புறக்கணிக்காமல் நம்மை விரும்புபவர்களாக இருக்க முயற்சிக்கிறோம்.§

அன்பு, பொறுமை, கருணை ஆகிய அழகிய குணங்களை வெளிக்காட்ட முனைவது நமக்கு சாதானா பயிற்சியாகும். நம்மிலும் வயது குறைவானவர்களை நாம் அரவணைத்து வழிகாட்டி உற்சாகமூட்டுகிறோம்.. பெரியவர்களை மதித்து அவர்களிடமிருந்து நாம் ஆவலுடன் கற்றுக்கொள்ள விழைகிறோம். நம்மோடு நெருக்கமானவர்களை நாம் “மாமி” “மாமா” அல்லது “அண்ணன்” என்று மரியாதைச் சொற்களால் அழைக்கிறோம். மற்றவர்களை நாம் “நமஸ்தே,”“வணக்கம்” அல்லது “ஓம் சிவாய” என்று வணக்கம் சொல்கிறோம். பெரியவர்களை எதிர்த்து பேசுவதோ அல்லது பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இடைமறிப்பதோ கூடாது என்ற இரண்டு வழக்கத்தையும் நாம் பின்பற்றுகிறோம்.§

நன்னடத்தைக்கு அடிப்படையாக உள்ளவை தூயத்தன்மை, பக்தி, பணிவு, தொண்டூழியம் ஆகிய நான்குமே. பிறரைக் கருணைக் கண்ணோடு பார்த்து செயல்படும்போது எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் நாம் தூயதன்மையை வளர்த்துக் கொள்கிறோம். வழிபாடு, தன்னலமற்ற சேவையாற்றுதல், நேர்மையாளராக, நம்பிக்கைக்கு உரியவராக இருத்தல் மூலம் நாம் பக்தியை வளர்த்துக் கொள்கிறோம். பணிவான தன்மையை நாம் ஒரு சூழ்நிலையில் பொறுமையைக் காட்டுவதன் மூலமும், மக்களிடம் சகிப்புத்தன்மை காட்டுவதன் மூலமும் வளர்த்துக்கொள்கிறோம். பசித்தவர்களுக்கும் நோயாளிகளுக்கும் வீடற்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும், திக்கற்றவர்களுக்கும் உதவியளிப்பதன் மூலம் நாம் தொண்டு மனப்பான்மையை வளர்த்துக்கொள்கிறோம். நமது மனசாட்சியே நமக்கு நன்னடத்தையை முதலில் போதிக்கும் ஆசான். அதுவே நம் ஆன்மாவின் குரலாகும். எது நல்லது எது கெட்டது என்று அறிந்துகொள்ள நாம் கடவுளையோ, சற்குருவையோ அணுகலாம். அல்லது சுவாமியையோ, சமய சாத்திர நூல்களையோ, பெரியோர்களையோ, குடும்பத்தாரையோ, நம்பிக்கைக்குரிய நண்பர்களையோ அணுகலாம்.§

image§

shutterstock§

தம் சமூகத்தில் தேவைப்படும் மக்களுக்கு ஓர் இளம் சேவகி பந்தியில் உணவு பரிமாறுகிறார். மக்களுக்கு எப்படியெல்லாம் உதவியும் சேவையும் செய்து அவர்களை உயர்த்தலாம் என்று நண்பர்களுடன்கூடி அடிக்கடி ஆலோசனை செய்வாள்.§

குருதேவர்: ஒரு இந்துவானவன் பணிவை வளர்த்து, அகந்தையை ஒதுக்கிவைத்து, உதவி நல்குவதில் ஆர்வங்காட்டி, எதற்கும் தடையாய் நிற்காமல், பிறரிடம் நல்லதையே கண்டு குற்றங்களை மறந்துவிடுகின்றான். உண்மையான பக்தன் என்று அழைத்துக்கொள்ள நாமே நமக்குள்ளாகவும் நமது சுற்றத்தாரிடமும் நன்னடத்தையோடு நடந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.§