42§ |
உறுதிமொழிகளை நாம் எவ்வாறு உபயோகிக்கிறோம்?§ |
உறுதிமொழி என்பது நமது வாழ்வில் நன்மையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் ஆக்ககரமான சங்கல்பம் அல்லது வலியுறுத்தலாகும். திரும்ப திரும்ப அச்சொற்களைச் சொல்வதன் மூலம் அதன் பொருளில் கவனம் வைத்து நாம் விரும்பும் பலனைக் கற்பனை செய்து உணர்வுமயமாகக் கலக்கச் செய்கிறோம். உங்களின் சொற்களுக்கும் கற்பனைக்கும் உணர்வுக்கும் சக்தி உண்டு. உங்கள் உள்மனதை அவை கவர்கின்றன. ஆக்ககரமாக, நன்மை தரக்கூடியதாக, படைப்புத்திறன்மிக்கதாக இருக்கும்போது அவை உங்களை மேலும் திடப்படுத்தி உங்களின் எல்லா செயல்களையும் வெற்றியடையச் செய்கின்றன.§
நாம் விரும்பும் பயனையடைய உறுதிமொழிகளின் சொற்கள் சரியான முறையில் இருக்க வேண்டும். இதைச் சாதனைப் பயிற்சியாக எப்படி செய்ய வேண்டுமென்றால் ஒவ்வொரு நாளும் முடிந்தால் ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் திரும்பத் திரும்ப உங்களுக்குள் உச்சரிக்க வேண்டும். மௌனமாக உச்சரிப்பது நல்லது என்றாலும் உரக்கச் சொல்வது இன்னும் சிறந்தது. உதாரணத்துக்கு: “என்னால் முடியும். நான் செய்வேன். திட்டமிட்டபடி என்னால் செய்துமுடிக்க முடியும்.” இப்படி ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொள்வதால் உங்கள் மனதில் நம்பிக்கையுணர்வு பதிவாகி உங்களின் மனவுறுதியை மேலும் அதிகரிக்கிறது. ஆனால் வெறும் சொற்களை மட்டும் சொன்னால் போதாது. “என்னால் முடியும், நான் செய்வேன். என்னால் செய்துமுடிக்க முடியும்” என்பதை உள்ளபடி உண்மையாகவே நீங்கள் உணர்வாக உணரவேண்டும். உண்மையாகவே உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். கடந்த காலத்தில் நீங்கள் ஏதேனும் வெற்றியடைந்திருந்தால் அந்த வெற்றி உணர்வை மீண்டும் நீங்கள் நினைத்துப் பார்ப்பது உங்களுக்கு உதவும்.§
ஆக்ககரமான உறுதிமொழிகள் வாழ்க்கையை நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்க உதவும். எதிர்மறையான எண்ணங்கள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். பலபேர் “என்னால் முடியாது, நான் செய்யமாட்டேன். என்னால் இயலாது,”என்று நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் கண்டிப்பாக தோல்வியடைகின்றனர். ஏன்? ஏனெனில் தோல்வியடையவே அவர்கள் மனதில் பதிவு பண்ணியிருக்கிறார்கள். உறுதிமொழிகள் தோல்வியை மாற்றி வெற்றிக்கு வழிவகுக்கின்றன. உங்கள் லட்சியத்தை உங்களால் தெளிவாகப் பார்க்கமுடிந்து அதை எட்டிப்பிடிப்பதை உணரமுடிகிறது. இதனால் வெற்றி இயல்பாகவே பின்தொடர்கிறது. குருதேவரின் பிற உறுதிமொழிகளாவன: “நான் இப்போது, இக்கணம், நன்றாகவே இருக்கிறேன்.” “என் எல்லா தேவைகளும் எப்போதும் பூர்த்தியாகும்.”§
“நான் சந்திக்கும் எந்த சவால்களுக்கும் நான் நிகரானவன்.” உறுதிமொழிகள் ஆக்ககரமான சுயக்கொள்கையை உருவாக்குகின்றன. நீங்கள் தகுதியானவர், ஒரு சிறப்பான வாழ்வுக்கு தகுதியானவர், அதையடைய முழுமையாக உங்களால் இயலும் என்று உங்களுக்கு தெரியும் என்பதுதான் அது. இத்தகைய ஆக்ககரமான சிந்தனை வைத்திருப்பது மூலம், நம்முள்ளே இருக்கும் ஆன்மீக இயல்புடன் நம்மை அடையாளங்கண்டு, நாம் பூரணமான வழியில் செல்லும் ஒரு தெய்வீக மனிதன் என்று உண்மையில் உணர வைக்கிறது.§
குருதேவர்: உறுதிமொழி எடுக்கும் அதிர்வுநிலைக்குச் செல்லுங்கள். இது மிக வலுவான உணர்வையும் உள்மனதில் ஆழமான பதிவையும் ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வார்த்தையும் சில அதிர்வலைகளைக் கொண்டிருக்கிறது. கற்பனையைவிட உண்மையாக உணர்வது மிகவும் உயர்ந்தது§