சிவனை அடையும் வழி

27§

முருகப்பெருமான் யார்?§

யோகம் மற்றும் சமயம் ஆகியவற்றின் கடவுளே முருகப்பெருமான். இவர் சிவனின் இரண்டாவது மகனாவார். சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து உதித்தவர். இவரின் மின்னியல்சக்தி ஆன்மாக்களிடம் ஆன்மீக மெய்யறிவைத் தட்டியெழுப்பி சிவனின் திருவடிக்கு முன்னேறச் செய்கிறது. கார்த்திகேயன், குமரன், ஸ்கந்தன், சண்முகநாதன், சுப்பிரமணியன் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இவரை இந்துக்கள் மட்டுமின்றி கௌதம புத்தரை வழிபடுவோரும் சீனா, ஜப்பான் மற்றும் இதர நாடுகளில் உள்ளோரும் வணங்குகிறார்கள். மணிப்பூரக சக்கரத்தில் சிகப்பு சாயலில் கம்பீரமாக வீற்றிருக்கும் இவர், நாம் சாதனா மூலமும் யோகா மூலமும் உயர்நிலை சித்த உணர்வை எட்டும்போது மனிதகுலத்தை ஆசீர்வதித்து நம்முடைய மன வைராக்கியத்தை மேலும் வலுப்படுத்துகிறார். பற்றின்மையையும் மனவைராக்கியத்தையும் மனத்திருப்தியையும் ஏற்படுத்தி நமது தியானத்தை அவரின் அருளாசி வலுப்படுத்துகிறது. முருகப்பெருமான் கையில் வேல் அல்லது ஈட்டியை ஏந்தியிருக்கிறார். அது இருளையும் அறியாமையையும் அழிக்கும் சக்தியைக் குறிக்கிறது. அரசர்களாக வீற்றிருக்கும் அரசாட்சியின் பின்னால் (தற்காலத்தில் மக்களை ஆட்சி செய்யும் எந்தவொரு அரசாங்கமும் உட்பட) அதிகாரப் பீடமாக அவரே இருந்து, நீதிவழுவா ஆட்சியும் அமைதியும் நிலைபெற உறுதிசெய்கிறார். சைவத்தமிழர்கள் முருகனை மிகவும் நேசிக்கிறார்கள். அவர்களின் கலாச்சாரத்தையும் சரித்திரத்தையும் அவரே வழிநடத்துகிறார் என்று அவர்கள் நம்புகின்றனர். பக்தர்கள் தங்களின் உடலையும் மனதையும் குணமாக்க முருகனை நாடுவதோடு வாழ்வில் சவால்களை எதிர்நோக்கும் ஆற்றலையும் பெற அவரை நாடுகின்றனர். அவருக்கு மூங்கில் காடும் குன்றுகளும் மிகவும் பிடித்தவை. கர்வமிக்க அழகிய மயிலே அவரின் வாகனம். முருகப்பெருமானோடு தொடர்பு ஏற்படுத்திகொள்ளும்போது அவர் மிகப்பெரிய சக்தியை அனுப்புவதால் நம்மிடம் மிகப் பெரிய மாறுதல் ஏற்படும், எனவே அதற்குத் தயாராக இருக்க வேண்டும்.§

பிராயச்சித்த விரதம் மேற்கொள்ளவும், தைப்பூச தினத்தில் காவடி எடுக்கவும் நம்மை அவர் ஊக்குவிக்கிறார். ஏனெனில் விரதங்கள் நம் வினைகளை மென்மையாக்கி நம் மனதைத் தூய்மைப்படுத்துகிறது. முருகனின் அருளாசி நமக்குக் கிடைக்கும்போது நாம் மேலும் நல்ல மனிதர்களாகவும், இரக்கமிக்கவர்களாகவும், அதிக ஒழுக்கம் ஆன்மீகம் உடையவர்களாகவும் மாறுகிறோம். பல அருளாளர்களும் பக்தர்களும் முருகனின் தரிசனத்தையும் தெய்வங்களின் ஞானக்காட்சிகளையும் கண்டிருக்கிறார்கள். என்றாலும் நாம் கண்ணைமூடினாலும் எப்படி சூரியக் கதிரின் வெப்பத்தை உணரமுடிகிறதோ, அதுபோல் முருகனும் தெய்வங்களும் இருப்பதை நாம் உணரமுடியும்.§

image§

shutterstock§

கோலாலம்பூருக்கு அருகே பத்துமலை நுழைவாயிலில் 140 அடி உயர முருகன் சிலை கையில் வேலுடனும் கழுத்தில் தங்க மாலையுடனும் நிற்கிறது. மலேசியாவாழ் இந்துக்கள் சிவனின் மைந்தனை அதிகம் வணங்குகின்றனர்.§

குருதேவர்: பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்க வேண்டுமென்றால் முருகப்பெருமானை வணங்குங்கள். நீங்கள் ஓர் ஆன்மீகவாதியாக முருகனை வணங்குங்கள். உங்களுக்கு சைவ சமயத்தை மேலும் போதித்து சிவபெருமானின் கரங்களில் உங்களைத் தவழவிட முருகனை வணங்குங்கள்.§