சிவனை அடையும் வழி

23§

சிவனைப்போல் எல்லாம் தெரிந்தவர்களாக நாம் ஏன் இல்லை?§

ரிபூரணப் பொருளே சிவபெருமான். ஒவ்வொரு ஆன்மாவும் உள்ளூர இந்தப் பரிபூரணத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. என்றாலும் புறத்தே பக்குவப்படாமலே இருக்கின்றன. சிவபெருமானை ஒரு ஓக் மரம் என்றும் ஆன்மாவை அதன் விதையென்றும் அந்த விதை ஒருநாள் ஒரு பெரிய மரமாக உருவெடுக்கும் என்றும் எண்ணிக்கொள்ளுங்கள். சிவனின் மறைக்கும் சக்தியான திரோதனா சக்தி ஆன்மாவின் அனைத்து அறியும் சக்தியையும் மறைக்கின்றது. இச்சக்தி கருணைமிக்க அருட்சக்தியாகும். நாம் அனுபவக் கல்வி கற்றுக்கொள்ளவும் பக்குவப்படவும் அச்சக்தி நம்மைக் கட்டுப்படுத்தி பாதுகாக்கிறது. இந்த அருட்சக்தி மூன்று பகுதிகளாக இருக்கிறது. முதலாவதாக நாம் எல்லையற்றவர்கள் என்பதை மறந்துபோகும்படி ஆணவம் மறைத்துவிடுகிறது. ஆணவமே ஆன்மாவைக் குறுக்கி இறைவனிடமிருந்து வேறாக பிரித்துக் காட்டுகிறது. மறைக்கும் இச்சக்தியினால் நாமும் இறைவனும் ஒன்றே என்பதையும் நாமும் தெய்வீகமான ஆன்மா என்பதையும் உணராமல் இக்குறிப்பிட்ட வாழ்க்கையின் இன்ப துன்பங்களில் முழுமையாக உழழ்கிறோம்.§

இரண்டாவதாக மாயை என்னும் இவ்வுலகம். இங்கு நாம் போதிய உலக அனுபவம் பெறுவதற்கு நமக்கு அளப்பறிய வாய்ப்புகள் வழங்குகின்றது. சிவபெருமானின் இந்த அருட்கொடை நாம் அனுபவம் பெறுகின்ற தளமாக விளங்குகிறது. மூன்றாவதாக கர்மம் என்னும் காரண காரியம் என்ற வினைக்கொள்கையானது நம் வாழ்க்கை நாடகத்தின் நடத்துனராக விளங்குகிறது.§

ஆணவம், கன்மம், மாயை என்ற இம்மூன்றும் ‘பாசம்’ அல்லது தளை என்றழைக்கப்படுகிறது. இக்கருத்தை ஓர் இடையனும் அவனின் பசுக்கூட்டமும் என்ற பழங்கால ஒப்பீட்டை வைத்து விளக்கலாம். இடையனே பதி என்னும் சிவபெருமான். பசுக்கூட்டமே பசு என்னும் ஆன்மாக்கள் (அல்லது உயிர்கள்). பசுக்கள் கழுத்தில் கட்டியிருக்கும் கயிறே பாசம் என்னும் கயிறு. இக்கயிற்றினால் பாசத்திலிருந்து பசுக்களை பதியானவர் வழிநடத்துகிறார். இக்கயிற்றைப் பிடித்துக்கொண்டு பசுக்கூட்டத்தை இடையன் கட்டியிழுத்து கட்டுப்படுத்தி பாதுகாக்கிறான். அதுபோலவே சிவபெருமானும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் ஆன்மாக்களைப் பாதுகாத்து வழிகாட்டுகிறார். பல பிறவிகள் எடுத்து இம்மும்மலங்களின் ஆதிக்க சக்தியின் கீழ் நமது ஆன்மா பக்குவமடைவதோடு அம்மூன்று மலங்களின் பிடிகளும் தளரத் தொடங்குகின்றன. தக்க காலம் கனிந்ததும் அனுக்கிரஹம் என்னும் அருட்சக்தியை சிவபெருமான் அருள்கிறார். இறுதியில் ஆன்மா சிவபெருமானை அறிந்துகொள்ள விழைகிறது. அப்போது நம் வாழ்வில் ஒரு சற்குரு தோன்றி நமக்கு மேலும் ஆத்மசாதனைகள் வழங்கி நாம் மேலும் பரிணாமத்தில் உயர உதவுகிறார். கடைசியாக அவன் அருளாலே சிவனுக்கும் தனக்குமுள்ள உண்மை அடையாளத்தை ஆன்மா உணர்ந்துகொள்கிறது. திருமந்திரம் விளக்குவதாவது: “தன்னை யறிந்து சிவனுடன் தானாக மன்னு மலங்குணம் மாளும் பிறப்பறும் பின்னது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளி நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.”§

image§

shutterstock§

நம்மைக் கட்டியிருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் பெரிய சங்கிலி பிணைப்பாக காட்டப்பட்டுள்ளது. என்றும் மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகத்துடனும், நமது தெய்வீக அடையாளத்தை மறைக்கும் அறியாமையுடனும் இவை நம்மை வியக்கவைக்கிறது.§

குருதேவர் : மாயை என்பது வகுப்பறை. கன்மமே ஆசிரியர். ஆணவமே மாணவர்களின் அறியாமை. ஆணவம், கன்மம்,, மாயை என்ற மூன்று தளைகளையும் நாம் பக்குவப்பட்டுக்கொண்டு போகும்போது நம்மைப் பாதுகாத்து நமக்கு உதவிசெய்ய சிவபெருமான் வழங்கியுள்ளார். இருப்பினும் சிவபெருமானின் யாவும் ஆறியும் பேராற்றலை தியானத்தில் ஈடுபட்டுள்ளோர் தமக்குள்ளேபோய் சுயத்தைத் தொடும்போது கொஞ்சநேரம் அனுபவிக்கலாம்.§