Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

imageWhat Is the Ideal Home?
ஒரு சிறப்பான வீடு என்றால் என்ன?
Apakah Yang Dikatakan Rumah Yang Ideal?
Comment décrire le foyer idéal?
§

image

The family here is taking time for religious studies. They have the TV off so they can concentrate. Afterwards they will talk together about what they learned. They will share ideas and ask questions. இந்தக் குடும்பம் சமய கல்விக்காக நேரத்தை எடுத்துக் கொள்கிறது. கவனமாக இருப்பதற்காகத் தொலைக் காட்சியை மூடிவிட்டனர். அவர்கள் படித்ததைப் பற்றி கலந்துரையாடுவார்கள். அவர்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு கேள்விகள் கேட்பார்கள். Keluarga ini sedang mengambil masa untuk belajar ajaran keagamaan. Mereka telah menutup televisyen dan menumpukan perhatian. Kemudian mereka akan berbincang bersama-sama tentang apa yang telah dipelajari. Mereka akan berkongsi pendapat dan bertanya soalan. La famille consacre du temps à l'étude religieuse. La télévision est éteinte, et l’on peut se concentrer. On pourra discuter ensuite de ce qu'on a appris, échanger des idées, poser des questions.§

image

Everyone needs a good home. It is a place to return to after school or work that makes the whole family feel safe and secure. In Hindu dharma, it is more than just a house. Our home is a sacred place, almost like a temple. We do puja every day in the home shrine to keep it pure and sacred. We keep all the rooms clean. We observe the Hindu festivals together in our home. We sing devotional songs and play traditional music. Saivite art and artifacts are displayed. We light a lamp in the shrine when we return from the temple to bless the home and attract the devas. Getting along with your siblings and respecting your mother and father keeps the home harmonious. Arguing disturbs the home, so we always avoid it. You can help your parents keep the home strong. Help with the morning puja. Help with the festivals. Help with the chores. Get along nicely with your parents and your brothers and sisters. Gurudeva recommends family home evening once a week. On this day, all family members have dinner together, play games, talk about each other’s interests and enjoy each other’s company without TV. Family is more precious than gold. Take a moment each day to consider how important your family is to you. Say kind words to them often.§

image

ஒவ்வொருவரும் நல்ல இல்லத்தை நாடுவர். இல்லத்தைப் பள்ளியிலிருந்தும் வேலையிலிருந்தும் திரும்புகிறவர்களுக்கு பாதுகாப்புத் தரும் இடமாக எண்ணுகிறார்கள். இந்து தர்மத்தில் உறைவிடத்தை இல்லமாகக் கருதப்படுகிறது. இல்லம் புனிதமானது. அது கிட்டத்தட்ட கோயிலைப் போன்றது. நமது இல்லத்தில் பூசையறையில் ஒவ்வொரு நாளும் பூசை செய்து எல்லா அறைகளையும் தூய்மையாகவும் புனிதமாகவும் வைத்துக் கொள்கிறோம். நாம் இந்து சமய விழாக்களையும் இல்லத்தில் கொண்டாடுகிறோம். நாம் பக்திப் பாடல்கள் பாடுகிறோம் மற்றும் பாரம்பரிய இசைக் கருவிகளை மீட்டுகிறோம். சைவ கலை மற்றும் கலைப் பொருட்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறோம். கோயிலிலிருந்து இல்லம் திரும்பியதும் நமது இல்லம் ஆசீர்வதிக்கப்படவும் தேவர்களை ஈர்க்கவும் விளக்கேற்றுகிறோம். உடன் பிறந்தாருடன் ஒற்றுமையாக இருக்கவும் தாய் தந்தையுரை மதிக்கவும் நமது இல்லதை எல்லோரும் ஒத்துப் போகும் இடமாக வைத்துக் கொள்கிறோம். வாதம் செய்தல் நமது இல்லத்துக்கு குந்தகம் விளைவிக்கும். ஆகவே வாதம் செய்வதை எப்போதும் தவிர்க்க வேண்டும். இல்லம் வலிமையுடன் திகழ நீங்கள் பெற்றோருக்கு உதவலாம். காலை நேரப் பூசைக்கு உதவலாம். விழாக் காலங்களில் உதவலாம். பெற்றோருடனும் உடன் பிறந்தவர்களுடனும் ஒத்துப் போகலாம். குருதேவரின் ஆலோசனைபடி வாரத்துக்கு ஒருநாள் குடும்ப மாலை நேரம் என்று ஒதுக்கிக் கொள்ளலாம். இந்நேரத்தில் ஒன்றாக இரவு உணவு உண்ணலாம், சேர்ந்து விளையாடலாம், அவரவரின் விருப்பத்தைப் பகிர்ந்து கொள்ளலாம், தொலைக் காட்சி இல்லாமல் சேர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கலாம். பொன்னைவிட மேலானது குடும்பம். ஒவ்வொரு நாளும் உனக்குக் குடும்பம். எவ்வளவு முக்கியமானது என்று நினைத்துப் பார்க்க சற்று நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி அன்பான வார்த்தைகளைக் கூறு. §

image

Semua orang memerlukan rumah yang bagus. Ia adalah tempat untuk pulang selepas dari sekolah atau kerja yang membuat semua ahli keluarga berasa selamat dan terjamin. Dalam dharma Hindu, ia lebih sekadar daripada sebuah rumah. Rumah kita adalah tempat suci, seakan-akan sebuah kuil. Kita melakukan puja setiap hari di bilik sembahyang rumah untuk memastikan ia tulen dan suci. Kita memastikan semua bilik bersih. Kita bersama-sama merayakan semua perayaan Hindu di rumah kita. Kita menyanyikan lagu-lagu keagamaan dan memainkan muzik tradisional. Seni dan artifak Saivite dipamerkan. Kita menyalakan lampu di bilik sembahyang apabila kita balik dari kuil untuk merestu rumah kita dan menarik perhatian dewa-dewi. Bergaul mesra dengan adik-beradik dan menghormati ibu bapa kita akan mengharmonikan rumah kita. Pertelingkahan akan menganggu rumah kita. Oleh itu kita sentiasa mengelaknya. Anda boleh membantu ibu bapa anda untuk memastikan rumah anda teguh. Bantulah semasa puja pagi. Bantulah semasa perayaan. Bantulah dengan kerja harian. Bersefahamanlah dengan ibu bapa dan adik beradik anda. Gurudeva mencadangkan supaya mengadakan perjumpaan keluarga sekali seminggu. Pada hari itu, semua ahli keluarga akan makan malam bersama-sama, bermain, berkongsi minat dan menikmati kehadiran sesama sendiri tanpa televisyen. Keluarga adalah lebih berharga daripada emas. Luangkan sedikit masa setiap hari untuk mempertimbangkan betapa pentingnya keluarga anda bagi diri anda. Luahkanlah selalu kata-kata baik kepada mereka.§

image

Tout le monde a besoin d’un bon foyer. C’est un lieu où l’on rentre après le travail ou l’école, où toute la famille se sent bien et en sécurité. Selon le dharma hindou, le foyer est bien plus qu’une simple maison ou logement. C’est un lieu sacré, presque un temple. Nous faisons puja chaque jour dans le sanctuaire familial pour qu'il demeure pur et sacré. Nous tenons très propre chaque pièce. Nous célébrons en famille et chez nous les fêtes hindoues. Nous entonnons des chants dévotionnels et nous jouons de la musique traditionnelle. Nous exposons de l’art sivaïte et des objets d’artisanat. Nous allumons une lampe en rentrant du temple pour bénir le foyer et attirer les dévas. Bien s'entendre avec ses frères et sœurs, respecter ses parents, cela permet de maintenir l’harmonie. Les disputes perturbent le foyer, aussi les évitons-les. Tu peux aider tes parents à maintenir cette puissance spirituelle au foyer. Aide-les le matin pour la puja et pendant les jours de fête, en te chargeant de diverses tâches. Entends-toi bien avec tes parents et tes frères et sœurs. Gurudeva recommande de passer une soirée en famille à la maison une fois par semaine. Ce jour-là, tous les membres de la famille dînent ensemble, font des jeux, partagent leurs sujets d’intérêt et apprécient la compagnie des uns et des autres sans télévision. La famille est plus précieuse que l’or. Prends un moment chaque jour pour réfléchir à ce que la famille représente pour toi. Dis souvent des paroles aimables à chaque membre de ta famille.§

image After morning puja, father leads the family in a devotional song to Ganesha. By singing, we can express our love and gratitude to the Gods. காலை பூசைக்கு பின்னர் அப்பா கணேசபெருமானுக்குப் பக்திப்பாடல்கள் பாட வழி நடத்துவார். பாடல்கள் மூலம் நமது அன்பையும் நன்றியையும் புலப்படுத்துகிறோம். Selepas puja pagi, bapa akan mengetuai dalam nyanyian lagu keagamaan untuk Ganesha. Dengan menyanyi, kita boleh meluahkan kasih dan penghargaan kita pada Tuhan-Tuhan. Après la puja du matin, le père dirige un chant dévotionnel à Ganesha. En chantant, on arrive à exprimer son amour et sa reconnaissance envers les Dieux.§

image Grandma is helping take care of the young children. It is a blessing to have your grandparents live in your home. Grandparents are wise. சிறு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள பாட்டி உதவுகிறார். உங்கள் இல்லத்தில் தாத்தா பாட்டி இருப்பதற்குப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். தாத்தா பாட்டி அறிவாளிகள். Nenek sedang membantu menjaga kanak-kanak. Adalah menjadi rahmat untuk mempunyai datuk nenek tinggal bersama-sama di rumah. Datuk nenek sangat arif. Grand-mère s’occupe un peu des enfants. Vivre ensemble avec ses grands-parents, c’est une bénédiction. Les grand-parents ont beaucoup de sagesse.§