சிவனை அடையும் வழி

66§

ஒரு கலையை நாம் ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்?§

ரு சிறந்த பாடகர் பாடும்போது அல்லது வாத்தியக் கலைஞர் இசையைக் கேட்கும்போது அல்லது ஒரு கைதேர்ந்த நாட்டியமணியின் நடனத்தைப் பார்க்கும்போது பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதேபோல் ஒரு சிவ பக்தரின் அழகிய ஓவியத்தைக் காணும்போது நமக்கு உற்சாகம் ஏற்படுகிறது. நயமாக ஒருவர் கதை சொல்லும்போது அது நம்மைக் கவர்ந்துவிடுகிறது. ஒவ்வொரு இசையும் ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு படைப்பும் அதை அனுபவிக்கும் ஒவ்வொரு பக்தருக்கும் கொடுக்கப்பட்ட வரமாகும். ஏதாவது ஒரு சைவக் கலையை—அதாவது சங்கீதமோ, நாடகமோ, நாட்டியமோ அல்லது ஒரு இசைக்கருவியையோ—சிறப்பாகக் கற்றுத் தேறுமாறு தமது பக்தர்களை குருதேவர் ஊக்குவித்துள்ளார். இதற்கு சரியான பருவம் குழந்தை பருவம்தான். அதுமட்டுமில்லாமல் பானை வனைதல், தையல், ைத்தறி, ஓவியம், ோட்டவேலை, ரொட்டி சுடுதல், கட்டடக் கலை போன்று கைகளால் படைக்கப்படும் கலைகளைக் கற்பதில் ஏற்படும் நன்மைகளை குருதேவர் பாராட்டியிருக்கிறார். இத்திறமைகள் அனைத்தும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நற்பலன்களைக் கொண்டுவரும்.§

நாம் ஒவ்வொருவருக்கும் பலப்பல தேர்வுரிமைகள் உண்டு. நீங்கள் பாரம்பரிய நடனம் கற்கலாம். அல்லது வாய்ப்பாட்டு, வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற இசைக் கலைகளைக் கற்கலாம். அல்லது சமஸ்கிருத உச்சாடனமோ காவியமாய் கதை சொல்லும் கலையையோ கற்கலாம். மாலை கட்டுவதில், கவிதை இயற்றுவதில், சிலை வடிப்பதில் அல்லது தச்சு வேலை செய்வதில் நீங்கள் சிறந்தவராகத் திகழலாம். கையால் கோலம் போடலாம் அலங்காரம் செய்யலாம். சமையல் கலையில் சிறந்தவராகி திருவிழாக்களுக்கு சுவையான பிரசாதம் சமைத்துக் கொடுக்கலாம். ஒரு கலையை அல்லது கைத்திறனைக் கற்றுக்கொள்ள கடின உழைப்பும் மனவுறுதியும் அர்ப்பணிப்பும் அவசியம். இந்த ஆற்றல் சக்திகளை நீங்கள் செய்யும் எல்லா பணியிலும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு கலையும் அல்லது கைத்திறனும் உங்கள் நண்பர்களை, குடும்பத்தை, சமூகத்தை தட்டியெழுப்பி புதிய வழிவகுக்கிறது. இக்கலாச்சார படைப்புக்கள் உங்களுக்கும் மனநிறைவூட்டுவதாக இருக்கின்றது. ஒரு திறன்மிக்க மனிதராக நீங்கள் ஆகிறீர்கள். ஒரு கலையை நீங்கள் திறம்பட கற்றுக் கொண்டால் அக்கலையை பிறருக்கும் கற்றுத் தரமுடியும். இந்து பாரம்பரியத்தில் 64 கலைகள் உள்ளன. சைவ தர்ம சாத்திரம் என்ற தம் புத்தகத்தில் குருதேவர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு விதமான கலைப் பட்டியலைக் காட்டியுள்ளார்.§

image§

shutterstock§

பட்டாடை உடுத்திக்கொண்டு பரதநாட்டியம் ஆடும் ஓர் இளம் நங்கை தெய்வத்தை நோக்கி பாவனை காட்டுகிறார். அந்நங்கையின் ஆண்டுக் கணக்கான கடும் உழைப்பும் சுய ஒழுக்கமும் வாழ்நாள் முழுதும் நிலைக்கக்கூடிய நளினத்தையும் பவித்திரத்தையும் கொண்டு வந்துள்ளது.§

குருதேவர்: ஓர் இந்துவானவன் சமயஞ்சார்ந்த கலைகள்மூலம் வாழ்வின் எல்லா அம்சங்களும் வெளிப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறான். தெய்வங்கள், தேவர்கள் மற்றும் நம் சமயக் குவர்களின் ஓவியங்கள், வண்ணப்பூச்சுக்கள், சிலைகள் அனைத்தும்—இந்துக்களின் சமய ஓவியமாகும். இசை பக்திமயமானது; அது உடம்பிலுள்ள உயர் சக்கர நாதங்களின் வெளிப்பாடு; தெய்வக் குரல்களின் எதிரொலி; நடனமானது தெய்வங்களின் நடமாட்டத்தை பிரதிபலிக்கின்றது.§