Sutras in Tamil

சூத்திரம் 81

சிவனை நேசிப்பவர்கள் யாவரும் குடும்பம் சமூகத்துக்கு வெளிப்படையாகப் பயன்படும் வகையில் தம் கைகளைப் பயன்படுத்தக் கூடிய கைத்தொழில்களான பானை செய்தல், தையல், பின்னல், நெசவு, பூச்சு, தோட்டமிடுதல், ரொட்டி சுடல், கட்டிடக் கலை போன்றவற்றைக் கற்க வேண்டும்.§

சூத்திரம் 82

சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் ஒரு கலாச்சாரத்தைப் பூரணமாக நிறைவேற்றுதல் வேண்டும். அது ஓவியம், பாடல், நாடகம், நடனம் ஆக இருக்கலாம் அல்லது சிவபெருமானின் இசைக்குழு வாத்தியங்களாகவும் (வீணை, மிருதங்கம், தம்புரா, தாளம், புல்லாங்குழல்) இருக்கலாம்.§

சூத்திரம் 83

சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் கிரியை வழிபாட்டிற்குச் சமஸ்கிருதமே தமக்கேற்ற மொழியெனக் கொள்ளல் வேண்டும். தியனத்திற்கு ஷம் பாஷையையும் புனித அக்கினி மூலம் கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் வேண்டுதல்களை வழங்கும் போது ரீயேவ் எழுத்துக்களையும் பயன்படுத்த வேண்டும்.§

சூத்திரம் 84

சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் இந்திய பஞ்சாங்க நாள்காட்டியைப் பிரயாணம், புதுக் காரியம், சடங்கு கிரியைகள், மேலும் வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகளை மங்களகரமாகத் திட்டமிடப் பயன்படுத்த வேண்டும். நம் ஆண்டு வேதமாதமாகிய மேடத்தில் தொடங்கும்.§

சூத்திரம் 85

சிவனை நேசிப்பவர்கள் அனைவரும் ஆசிய இந்து ஆசாரங்களைத் தழுவி அதன் சைகைகள், நடத்தை, பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள், உடைகள், தூய்மை ஆகியவற்றைக் கற்றுத் தேற வேண்டும். அவர்கள் பாரம்பரிய சைவர்களுடன் வாழ்வதன் மூலம் கற்றுக் கொள்வர்.§