Sutras in Tamil

சூத்திரம் 21

உண்மையை நாடுவோர் அனைவரும் நீதிநெறிக் கட்டுப்பாடான அகிம்சையை அனுஷ்டிக்க வேண்டும். கனவில் கூட அடுத்தவரை மனத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ அவர்கள் துன்புறுத்த மாட்டார்கள். வாய்மை பேணி அவர்கள் பொய் பேசுதல் வாக்குத் தவறல் ஆகியவற்றிலிருந்து விலகி நிற்பர்.§

சூத்திரம் 22

உண்மையை நாடுவோர் அனைவரும் திருடாமை எனும் நல்லொழுக்கத்தை மேற்கொண்டு திருடுதல் பேராசைப்படுதல் கடனாளியாதல் கூடாது. எல்லோரும் பாலியலில் புனிதத்தை அனுஷ்டித்து பிரமச்சாரியத்தில் காமத்தையடக்கி திருமண வாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.§

சூத்திரம் 23

உண்மையை நாடுவோர் அனைவரும் பொறுமையை அனுஷ்டித்து மனிதர்களிடம் சகிப்புத் தன்மையையும், சூழ்நிலைகளுக்கேற்ப பொறுமையற்ற தன்மையைக் கட்டுப்படுத்தவும் வேண்டும். அனைவரும் உறுதியாய் நின்று பயம், விடாமுயற்சியின்மை, தளம்பல், மாறுகுணம் ஆகியவற்றிலிருந்து மீள வேண்டும்.§

சூத்திரம் 24

உண்மையை நாடுவோர் அனைவரும் கருணையைக் கடைப்பிடித்து எல்லா ஜீவராசிகளின் மேலுமுள்ள இரக்கமற்ற, கொடூரமான, உணர்வற்ற குணங்களை வெல்லுதல் வேண்டும். அனைவரும் நேர்மையை மேற்கொண்டு வஞ்சகம், தவறு செய்தலைக் கைவிட விரதம் எடுக்க வேண்டும். ஆம் அவர்கள் நல்லொழுக்கத்தில் நிகரற்றவர்கள்.§

சூத்திரம் 25

உண்மையை நாடுவோர் அனைவரும் மிதமான பசியையே கொண்டிருக்க வேண்டும். அதிகமாக உண்ணுதலோ மாமிசம், மீன், கடலுணவு, கோழி, முட்டை ஆகியவற்றை உண்ணுதலோ கூடாது. அவர்கள் நீதிநெறியின் புனிதத்தை மேற்கொண்டு மனம், வாக்கு, காயத்தில் தூய்மையின்மை சேராமல் தவிர்க்க வேண்டும்.§