சைவ இந்து: மதத்தின் சமயக்கோட்பாடு

சைவ இந்து
மதத்தின் சமயக்கோட்பாடு§

1§

சிவபெருமானின பக்தர்கள் யாவரும் அவரே கடவுள் என்றும், அவர் முலவர், பரமசிவம், காலத்திற்கும் உருவத்திற்கும் இடைவெளிக்கும் அப்பாற்ப்பட்டவர என்றும் நம்புகிறார்கள். முனிவர் அமைதியாக பகறுகின்றார "இது அதுவன்று." ஆமாம். இவ்வாறு ஆராய்ந்து அறிய முடியாதவர் சிவபெருமான். ஓம்.§

2§

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் அவரே கடவுள் என்றும், அவரது இயல்பு உள்ளார்ந்த அன்பு, பராசக்தி, அடித்தளத்தில் உள்ளது, மூலதத்துவம் அல்லது சக்தியாக எல்லாவற்றிலும் ஓடும் தூய உணர்வு , வாழ்க்கை, அறிவு மற்றும் மகிழ்ச்சி என்றும் நம்புகிறார்கள். ஓம்.§

3§

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் அவரே கடவுள் என்றும், அவருடைய உள்ளார்ந்த இயல்பு மூல ஆத்மா என்றும் மற்றும் அவர் மேன்மையான மஹாதேவன், பரமேஸ்வரன், வேதங்கள் மற்றும் ஆகமங்களின் மூலவர் என்றும், எல்லாவற்றையும் ஆக்கல், காத்தல், அழித்தல் செய்பவர் என்றும் நம்புகிறார்கள். ஓம்.§

4§

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் கணேச பெருமானை நம்புகிறார்கள். அவர் சிவ-சக்தியின் மகன் என்றும், எல்லா செயலையும் வழிப்பாட்டையும் செய்யும் முன் அவரை முதலில் வணங்க வேண்டும் என்றும் நம்புகிறார்கள். அவருடைய ஆட்சி இரக்கமுடையது. அவருடைய சட்டம் நியாயமானது. நியாயம் அவரது மனம். ஓம்.§

5§

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் முருகப்பெருமானை நம்புகிறார்கள். அவர் சிவ-சக்தியின் மகன் என்றும் அவருடைய அருள் நிறைந்த வேல் அறியாமை என்ற கட்டை உருக்கும் என்றும் நம்புகிறார்கள். முனிவர் தாமரை ஆசனத்தில் அமர்ந்து முருகனை வணங்குகின்றார். இவ்வாறு கட்டுப்பட்டதால் அவருடைய மனது அமைதி அடைகின்றது. ஓம்.§

6§

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் ஒவ்வொரு ஆத்மாவும் சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அது அவரை ஒத்து இருப்பதாகவும், இந்த அடையாளம் ஆணவம், கர்மம், மாயை என்ற பிணைப்புகளை அவரது அருளால் எல்லா ஆத்மாக்களிடமிருந்து விலக்குவதையும் நம்புகிறார்கள். ஓம்.§

7§

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் மூன்று உலகங்கள் உள்ளன என்று நம்புகிறார்கள் - ஆத்மாக்கள் பூத உடலைப்பெறும் பூலோகம், ஆத்மாக்கள் ஆவி உடலைப்பெறும் அந்தர்லோகம், மற்றும் காரண உலகமான சிவலோகம். அங்கு ஆத்மாக்கள் பேரொளியோடு திகழ்கின்றன. ஓம்.§

8§

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் கர்ம சட்டங்களை நம்புகின்றனர். ஒவ்வொருவரும் தன் செயல் வினையின் பயனை அடைவர் என்றும் ஒவ்வொரு ஆத்மாவும் எல்லா கர்மங்களையும் தீர்மானித்து, மோட்சமும் விடுதலையும் பல பிறவிகள் மூலம் அடையும் என்றும் நம்புகிறார்கள். ஓம்.§

9§

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் நல்ல நடத்தை, கோவில் வழிபாடு, யோகா, வாழும் சத்குரு அருள் மூலம் பரமசிவத்தை அடைவது ஆகிய யாவும் ஞானம், மெய்யறிவு பெற தேவை என்று நம்புகின்றனர். ஓம்.§

10§

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் இயல்பான தீமை கிடையாது என்று நம்புகிறார்கள். தீமைக்கு மூலம் கிடையாது, அறியாமையைத் தவிர. சைவ இந்துக்கள் உண்மையிலேயே கருணை உள்ளவர்கள். முடிவில் நன்மை, தீமை என்பது இல்லை என்று அறிவார்கள். எல்லாம் சிவபெருமானின் விருப்பம். ஓம்.§

11§

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் மதம்தான் மூன்று உலகங்களிலும் இணக்கமாக செயல்பட காரணம் என்றும், இந்த இணக்கத்தை கோவில் வழிப்பாடு முலமாக தோற்றுவிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எனெனில் அங்குதான் மூன்று உலகங்களில் உள்ளவர்கள் பங்கு கொள்வார்கள். ஓம்.§

12§

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் சைவ மதத்தின் மேன்மையான, தேவையான மந்திரம் ஐந்து புனித ஒலிகள் கொண்ட நமசிவாய என்று நம்புகிறார்கள். ஓம்.§

சமய உணர்ச்சியின் உறுதி:§

சிவபெருமான் இயற்கையான அன்புக் கொண்டவர். மெய்ப்பொருள் எல்லைக்கு அப்பாற்பட்டவர்.§

அன்பே சிவமயம், சத்தியமே பரமசிவம்.§